49. திருமுருகன்பூண்டி பதிக வரலாறு: கொடுங்கோளூரில் சேரமான் பெருமாளின் வழி பாட்டை ஏற்றிருந்த சுந்தரர், "ஆருரானை மறக்கலுமாமே" என்று திருப்பதிகம் பாடி, 'திருவாரூரைச் சென்று தொழுவேன்' என்று கூறி எழுந்தருள, சேரர் பெருமான் பிரிவாற்றாமையால் வருந்துவதை யறிந்து, வருந்தாது பகையழித்து உமது பதியின் கண் இருந்து அரசாளும் என்றார். சேரர் பெருமான், 'எனக்குப் பாரோடு விசும்பாட்சி உமது பாதமலரே; ஆயினும் நீர் திருவாரூர்க்கு எழுந்தருள்வதைத் தடுக்க அஞ்சுகின்றேன்' என்று சொல்ல, சுந்தரர், "என்னுயிருக்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை மறந்திரேன்" என்று கூறி எழுந்தருளினார். அது கண்ட சேரர் பெருமான் அமைச்சர்கள் வாயிலாக, நவமணிகளும், மணிப்பூண்களும், துகில் வருக்கம் முதலியவைகளும் ஏவலாளர் தலையின்மேல் நிரம்ப ஏற்றி அனுப்பினார். வழியில் திருமுருகன்பூண்டிக்கு அருகில் சிவபெருமான், பூதங்களை வேடர் வடிவாக்கிப் பொருள்களைக் கவர்ந்து வருமாறு அனுப்ப, அவைகள் அவ்வாறே சென்று எல்லாப் பொருள்களையும் பறித்து மறைந்தபின் சுவாமிகள், திருக்கோயிலை யடைந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 170) குறிப்பு: இத் திருப்பதிகம், சுந்தரர் ஆறலைப்புண்ட இடத்தில் கோயில் கொண்டிருந்த இறைவரைக் கண்டு, 'அந்தோ! இக்கொடிய இடத்தில், இறைவியோடு நீர் ஏன் இருக்கின்றீர்? அப்பாற் சென்று இருக்கலாகாதோ?' எனக் கவன்று அருளிச் செய்தது, அன்பின் மிகுதியால், இறைவரது ஆற்றல் தோன்றாதாயிற்று என்க. இது, நகைவகையான் இகழ்வதுபோலப் புகழ்ந்ததாகாமை, சேக்கிழார் திருமொழியான் அறிக. பண்: பழம்பஞ்சுரம் பதிக எண்: 49 திருச்சிற்றம்பலம் 498. | கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் | | விரவ லாமைசொல்லித் | | திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் | | டாற லைக்குமிடம் |
1. பொ-ரை: எம்பெருமானிரே, முடைநாற்றம் சேய்மையினும்
|