பக்கம் எண் :

832
 
முடுகு நாறிய வடுகர் வழ்முரு

கன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்

ஏத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.

1

499.

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்

விரவ லாமைசொல்லிக்

கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்

கூறை கொள்ளுமிடம்



விரையச்சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி, வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர், வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி, 'திடுகு' என்றும், 'மொட்டு' என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; இம்மாநகரிடத்து இங்குறுகிய, நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்?

கு-ரை: 'விரவல்' என்னும் தொழிற்பெயர், எதிர்மறை ஆகாரமும், மகர ஐகாரமும் பெற்றுநின்றது, "அழுக்காறாமை" (திருக்குறள். அதிகாரம். 17.) என்றதுபோல. அஃது ஆகுபெயராய், அதனையுடைய சொல்லைக் குறித்தது. 'திடுகு, மொட்டு' என்பன, அச்சுறுத்தும் சில குறிப்புச் சொற்கள். பிறவுங் கொள்வராயினும், எல்லாவற்றையும் எஞ்சாது கொள்ளுதல் தோன்ற ஆறலைப்பாரை, 'கூறைகொள்வார்' என்றல் வழக்கு என்பதை, 'ஆறுபோயினாரெல்லாங் கூறைகோட்பட்டார்' என்றல் பற்றி அறிக. "கூறைகொண்டு ஆறலைக்குமிடம்" என்றதனை, 'ஆறலைத்துக் கூறைகொள்ளுமிடம்' எனப் பின்முன்னாக மாற்றி யுரைக்க. இகழும் நகரை, "மாநகர்" என்றது, இகழ்ச்சிக் குறிப்பினால். 'இம் முருகன் பூண்டி' எனச் சுட்டு வருவிக்க. "மாநகர்வாய்" என ஒன்றாக ஓதினாரேனும், 'மாநகர்' எனவும் 'இதன்வாய்' எனவும் இரண்டாக்கி உரைத்தல் கருத்தென்க. 'எற்றுக்கு' என்பது, 'எத்துக்கு' என மருவிற்று. "இங்கு" என்றது, திருக்கோயிலை. 'அப்பாற் போகலாகாதோ?' என்பது, ஆற்ற லான் வந்து இயையும். இத்திருப் பாடல்களில், ஈற்றடிகள் நீண்டி சைத்தன. 'எம்பிரானிரே' என்றோதுதல் பாடமாகாது.

2. பொ-ரை: எம்பெருமானிரே, முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை, வேடு