பக்கம் எண் :

833
 
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

2

500.பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்

பாவம் ஒன்றறியார்

உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும்

கூறை கொள்ளுமிடம்

முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு

கன்பூண்டி மாநகர்வாய்

இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்

எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

3



வர்கள், வில்லைக் காட்டி, வெருட்டியும், பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும், கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

கு-ரை: "தாது" என்றது, உதிர்ந்து கிடப்பனவற்றை. "எல்லைக் காப்பு" நான்காவதன் தொகை. அது, பகுதிப்பொருள் விகுதி. 'எல்லை காப்பது' என்பது பாடமாயின், 'இவ்வெல்லை தான் காக்கப்படுதல் சிறிதும் இல்லையாயின்' என உரைக்க.

3. பொ-ரை: எம்பெருமானிரே, வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அப்பாவிகள், பாவம் என்பதொன்றையறியாராய், விலங்குகளையே கொன்று தின்று, நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; இதன்கண் நீர், இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று, இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

கு-ரை: 'பசுக்கள்' என்பது, விலங்கின் பொதுவை உணர்த்திற்று. 'அப்பாவிகள்' எனச் சுட்டு வருவிக்க. 'உயிர்' என்பதும், 'இழுக்கு என்பதும், எதுகை நோக்கித் திரிந்தன. 'பிச்சை ஏற்கின்ற நீர், பிறர் பொருளைப் பறித்தலையே தொழிலாக உடையவர் வாழ்கின்ற இடத்தில் இருத்தல் எதற்கு' என்றவாறு. இழுக்கு நீங்குதலாவது. 'இரப்