501. | பீறற் கூறை உடுத்தொர் பத்திரங் | | கட்டி வெட்டினராய்ச் | | சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங் | | கூறை கொள்ளுமிடம் | | மோறை வேடுவர் கூடி வாழ்முரு | | கன்பூண்டி மாநகர்வாய் | | ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில் | | எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | | 4 |
502. | தயங்கு தோலை உடுத்துச் சங்கர | | சாம வேதமோதி | | மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் | | மார்க்க மொன்றறியீர் |
பவர்' என்று இகழப்படாது, 'பெரியோர்' என நன்கு மதிக்கப்படுதல். 4. பொ-ரை: எம்பெருமானிரே, குற்றமுடைய வேடுவரே கூடி, ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய், வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அவர்கள், கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு, அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு, வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால், அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்? கு-ரை: 'வெட்டனராய்' என்பது பாடம் அன்று. "பங்கியர்" என்றதனை, 'வில்லியர்' முதலியன போலக் கொள்க. 5. பொ-ரை: எம் பெருமானிரே, நீர், விளங்குகின்ற தோலை உடுத்து, இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால், தழுவுகின்ற, அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும், இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்? கு-ரை: 'உடுத்த' என்பது பாடம் அன்று. 'சங்கரனே' என்றும் 'ஓதுபவனே' என்றும் உரைத்தல் பொருந்தாமை அறிந்து கொள்க.
|