| முயங்கு பூண்முலை மங்கை யாளொடு> | | முருகன்பூண்டி மாநகர்வாய் | | இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் | | எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | | 5 |
503. | விட்டி சைப்பன கொக்க ரைகொடு | | கொட்டி தத்தளகம் | | கொட்டிப் பாடுமித் துந்து மியொடு | | குடமுழா நீர்மகிழ்வீர் | | மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு | | கன்பூண்டி மாநகர்வாய் | | இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் | | எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | | 6 |
504. | வேத மோதிவெண் ணீறு பூசிவெண் | | கோவணந் தற்றயலே | | ஓத மேவிய ஒற்றி யூரையும் | | உத்திர நீர்மகிழ்வீர் |
'அறியீரோ' என்னும் ஓகாரம் தொகுத்தலாயிற்று; அதனை, எடுத்த லோசையாற் கூறியுணர்க. 6. பொ-ரை: எம்பெருமானிரே, நீர், கொட்டிப்பாடுதற்கு உரிய, தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற' 'கொக்கரை, கொடு கொட்டி, தத்தளகம், துந்துமி, குடமுழா, என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால், மற்றும், ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால், பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்? கு-ரை: கொக்கரை முதலியன, வாச்சிய வகைகள். 'மத்தளகம்' எனப் பாடம் ஓதுதலுமாம். இகரச் சுட்டினை, 'கொடு கொட்டி' என்றதற்கு முன்னர் வைத்துரைக்க. "ஆகில்" என்றதனை, "மகிழ்வீர்" என்றதனோடுங் கூட்டுக. 7. பொ-ரை:எம்பெருமானிரே, நீர், வேதத்தை ஓதிக்கொண்டு, வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு, வெள்ளிய கோவணத்தை உடுத்து,
|