பக்கம் எண் :

836
 
மோதி வேடுவர் கூறை கொள்ளு

முருகன்பூண்டி மாநகர்வாய்

ஏது காரண மேது காவல்கொண்

டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

7


505.

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்

தோள்வ ரிநெடுங்கண்

மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்

பாகம் வைத்துகந்தீர்

முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்

பூண்டி மாநகர்வாய்

இடவ மேறியும் போவ தாகில்நீர்

எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

8



பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர்; அங்குப் போகாமல், வேடர்கள், வருவோரைத் தாக்கி, அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, யாது காரணத்தால், எதனைக் காத்துக் கொண்டு, எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்?

கு-ரை: திருவொற்றியூரில் உத்திர நாளில் நீர்விழா நடைபெற்றமையை, "ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக ஒளிதிகழும் ஒற்றியூர்" (தி. 6 ப. 45 பா. 5) என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் திருமொழியால் உணர்க. "நீர்" என்றதனை முன்னிலைப் பெயராகக் கோடலுமாம். "உத்தி" என்பது பாடம் அன்று.

8. பொ-ரை: எம்பெருமானிரே, நீர், தனிமையாக இல்லாது, படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும், பருத்த தோள்களையும், வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய, 'உமை' என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர்; முடவரல்லீர்; ஆகவே, பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர்; அன்றியும், நீர,் விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால், இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, இங்கு, எதன்பொருட்டு இருக்கின்றீர்?

கு-ரை: இடைக்குப் பாம்பு உவமையாகச் சொல்லப்படுதலும் மரபாதல் அறிக.