506. | சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் | | பற்ற லைகலனா | | வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர் | | பாகம் வைத்துகந்தீர் | | மோந்தை யோடு முழக்க றாமுரு | | கன்பூண்டி மாநகர்வாய் | | ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் | | எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | | 9 |
507. | முந்தி வானவர் தாந்தொ ழும்முரு | | கன்பூண்டி மாநகர்வாய்ப் | | பந்த ணைவிரற் பாவை தன்னையொர் | | பாகம் வைத்தவனைச் |
9. பொ-ரை: எம் பெருமானிரே, வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு, வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி, முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, நீர், 'மொந்தை' என்னும் வாச்சியத்தோடு, வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தியோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்? கு-ரை: 'ஏந்தி' என்பது எஞ்சி நின்றது. 'மொந்தை' என்பது நீட்டலாயிற்று. 'வேடர்' என்பது, மேலைத் தொடர்பாற் கொள்ளப்பட்டது. 10. பொ-ரை: தேவர், ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்குகின்ற, திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற பந்திற் பொருந்திய விரல்களையுடைய, பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை, அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள், துன்பம் ஒன்றும் இல்லாதவராவர். கு-ரை: "சிந்தை" என்றது, ஆகுபெயராய், அன்பைக் குறித்தது. 'சிறு தொண்டன்' என்பதும் பாடம். 'அவ்வெந்தம் மடிகள்'
|