பக்கம் எண் :

83
 

சலசலக்கும் நீரிலே சதிராடும் அழகு:

சோற்று வளமெல்லாம் ஆற்றுவளத்தின் அடிப்படையில் தானே இருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் செல்லுமிடமெல்லாம் செல்வங் கொழிக்க வைக்கும் ஆறுகளைப் பார்க்கிறார். அப்படியே படமெடுத்துப் பாட்டில் அமைக்கிறார்.

காவிரி:

"மலைக்கொ ளருவி பலவாரி மணியும்

முத்தும் பொன்னுங் கொண்

டலைக்குந் திரைக்கா விரிக் கோட்டத்

தையா றுடைய அடிகளோ"

(தி. 7 ப. 77 பா. 7)

"நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில் பெற
நின்ற காவிரிக் கோட்டிடை"

(தி. 7 ப. 48 பா. 7)

பாலியாற்றின் வனப்பு:

"சந்தன வேரும் காரகிற் குறடும் தண்மயிற் பீலியும் கரியின்
தந்தமும் தரளக் குவைகளும் பவளக் கொடிகளும்
சுமந்து கொண் டுந்தி
வந்திழி பாலி ............................................"

(தி. 7 ப. 69 பா. 5)

பெண்ணையாற்றின் பெருமை:

"காரூர் புனல் எய்திக்கரை கல்லித் திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித் திகழ் பன்மா மணிஉந்தி"

(தி. 7 ப. 1 பா. 10)

"கந்தம் கமழ் காரகில் சந்தனம் உந்திச்
செந்தண் புனல்வந் திழி பெண்ணை"

(தி. 7 ப. 13 பா. 3)

கெடிலத்தின் கவின்:

"கூந்தல்தாழ் புனல் மங்கை குயிலன்ன மொழியாள்
சடையிடையில் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி