வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி மறிகடலை யிடங் கொள்வான் மலையாரவாரி ஏந்துநீர் எறி கெடிலம்" (தி. 7 ப. 38 பா. 5) சிற்றாற்றின் சிறப்பு: | "எறிக்குங் கதிர்வேய் உதிர் முத்தமொ டேலம் | இலவங்கம் தக்கோல மிஞ்சி | | செறிக்கும் புனலுட் பெய்து கொண்டு | மண்டித்திளைத் தெற்று சிற்றாறு" | (தி. 7 ப. 42 பா. 1) |
"தண்ணாரகிலும் நலசாமரையும் அலைத்தெற்று சிற்றாறு"(-) மணிமுத்தா நதியின் மாண்பு: "எத்திசையும் திரையேற மோதிக் கரைகள் மேல் முத்திமுத் தாறு வலஞ்செயும் முதுகுன்றரே" (தி. 7 ப. 43 பா. 10) கொள்ளிடத்தின் கொள்ளை யழகு: "உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக் குங்குமங்கள் உந்திவரும் கொள்ளிடம்" (தி. 7 ப. 40 பா. 6) "குருமணிகள் கொதித்திழிந்து சுழித்திழியும் நிரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடம்" (தி. 7 ப. 40 பா. 7) அலர் உந்திவரும் நிவா: "கல்வாய் அகிலும் கதிர் மாமணியுங் கலந்துந்தி வரும் நிவா" (தி. 7 ப. 3 பா. 1) "கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர் மிகவுந்தி வரும் நிவவின் கரைமேல்" (தி. 7 ப. 3 பா. 4)
|