513. | மறவல் நீமன மென்னொடு சூளறு வைகலும் உறவும் ஊழியும் ஆயபெம் மாற்கிட மாவது பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப் புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே. | | 6 |
514. | ஏசற்று நீநினை என்னொடு சூளறு கைவலும் பாசற்றவர் பாடிநின் றாடும் பழம்பதி தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப் பூசற்றுடி பூசல றாப்புன வாயிலே. | | 7 |
515. | கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை |
6. பொ-ரை: மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; எல்லா உயிர்கட்கும் உறவும், காலமுமாய் நிற்கும் சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது, சேவற் புறா, தன் பெடை பிரிந்தபின்பு, அதனை, கள்ளிப் புதரின் வளர்ந்த கிளையில் ஏறிநின்று கூப்பிட, புனஙகளில் பொன் நிறைந்து காண்ப்படுகின்ற திருப்புனவாயிலே; அதனை மறவாது நினை; பின்னர் என்னொடு சொல். கு-ரை: 'மறவல்' என்றது, 'மறவாதுநினை' என்றவாறு. 'பிறகு' எனபது, 'பிறவு' எனத் திரிந்தது. "கூப்பிட" என்றதனால், 'பிரிந்த பிறகு' என்பது பெறப்பட்டது. புனத்திற் பொன் சூழ்தல் புனவாயிலிலும், புறா கூப்பிடுதல் பாலை வெளியிலும் என்க. 7. பொ-ரை: மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; பாசம் நீங்கிய மெய்யுணர்வினர் புகழ்ந்து பாடி, நின்று ஆடுகின்ற பழைமையான ஊர், பல நாட்டிலும் உள்ள அடியவர் பலரும் வந்து காலையிலும், மாலையிலும் வணங்க, வேடுவர்களது போர்ப்பறை ஆரவாரத்தை ஒழியாத திருப்புனவாயிலே; அதனை, இகழ்தல் அற்று, நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல். கு-ரை: "ஏசு" முதனிலைத் தொழிற் பெயர். 'பாசம்' என்பது குறைந்து நின்றது. 8. பொ-ரை: கொள்ளிபோல முனை சிவந்து நீண்ட வாயினை யுடையனவாகிய, கூரிய பற்களையுடைய பன்றிகள் நிலத்தைக் கிண்ட வெளிப்பட்ட சிறந்த மாணிக்க மணியோடு நெருப்புத் தோன்று்
|