பக்கம் எண் :

843
 
கள்ளிவற் றிப்புற் றீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

8

516.

எற்றேநினை என்னொடு சூளறு வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூ றுகார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

9



மிடத்துச சிவந்து காட்டும் நிலத்தின்கண் உள்ள கள்ளி உலர்ந்து, புல்தீந்து, கொடிய காடு அழிகையினாலே, புள்ளிமானின் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே.

கு-ரை: மேலைத் திருப்பாடல்களில் உள்ளன பலவற்றையும் முன்னும் பின்னும் கொணர்ந்து இயைத்துரைத்து ஏனைய திருப்பாடல்களோடு பொருந்த உரைத்துக்கொள்க. 'தெள்ளிய' என்னும் பெயரெச்சத்தின்ஈறும், 'விழிக்குமிடத்து' என்னும் வினையெச்சத்தின் அத்தும் தொகுத்தலாயின. "வற்றி, தீந்து" என்னும் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. 'கழிக்கவே' என்பது பாடம் அன்று. 'மானினம் புக்கொளிக்கும்' என்றது, 'அவைகட்கு அரணாய் நிற்கும் சிறப்பினது' என்றவாறு. 'தரை' என்னும் வடசொல், ரகர றகர வேறுபாடின்றி, 'தறை' என வருதலும் உண்டு. 'தரை' என்றே பாடம் ஓதினும் இழுக்காது.

9. பொ-ரை: மனமே, நின் செயகைதான் எத்தன்மைத்து! என்னொடு சூள்செய்தலை ஒழி; நம் வலிய வினையெனப் படுவன யாவும் அடியொடு கெட்டொழிதற்கு மற்றுச் சூழ்ச்சி யாதும் வேண்டா; கல்லைச் சூழ்ந்த புதரிலும், கரிய காட்டிடத்தும் இரையை உண்ட கரிய கானங்கோழிகள், ஈயற் புற்றுக்களின் மேல் ஏறி நின்று, 'கூகூ' எனக் கூப்பிடுகின்ற திருப்புனவாயிலை நாள்தோறும் தப்பாது நினை.

கு-ரை: 'மனமே' என்பது, மேலைத் தொடர்பால் வந்தியையும், 'ஆயின' என்பது, எழுவாய்ப் பொருள் தருவதோர் இடைச்சொல். 'தூறு' என்பது, 'காடு' என்பதனோடு உம்மைத் தொகை படத் தொகுதலின், ஒற்றிரட்டாதாயிற்று.

10. பொ-ரை: நீற்றின்கண் மூழ்கிய திருமேனியனாகிய சிவ பெருமானது, புனங்களில் பொன் நிறைந்துள்ள திருப்புனவாயிலை அடியார்க்கு அடியானாகிய திருநாவலூரன் பாடிய இப்பாடல்களை,