517. | பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை அடியா ரடியன் னாவல வூரன் உரைத்தன மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வின மாய்ந்துபோய்க் குடியாகிப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
சோம்பியிராது கற்று, அவற்றால் அப்பெருமானை ஏத்த வல்லவர், முன்செய்த வினை எல்லாம் மாய்ந்துபோகப் பெற்று, அப்பெருமானுக்கே அடியராய் வாழ, அவற்றை இசைவழிப் பாடி நன்று ஆட வல்லவர்க்கு, செய்வன தவிர்வனவற்றிற் பிறழ்தலால் வருங் குற்றம் இல்லையாம். கு-ரை: இயற்றமிழ்ப் பாவளவிற் பாடி ஏத்துதலினும், இசைத்தமிழியல்பு நிரம்பப் பாடுதலும், அதற்கேற்க ஆடுதலும் சிறந்தன என்றவருளியவாறு. "கீதம் வந்த வாய்மையாற் கிளர்த ருக்கி னார்க்கலால் ஓதி வந்த வாய்மையா லுணர்ந்து ரைக்க லாகுமே" (தி. 3 ப. 52 பா. 7) "கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடும் வகையால் ஏழையடி யாரவர்கள் யாவை சொன சொன்மகிழும் ஈசன்" (தி. 3. ப. 71 பா. 1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழிகளையும், "அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளு மாறே" (தி. 4. ப. 77 பா. 3) "தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி"
(தி. 6. ப. 31 பா. 3) என்ற திருநாவுக்கரசர் திருமொழிகளையும் காண்க. 'ஆக' என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது.
|