525. | முன்னெறிவா னவர்கூடித் | | தொழுதேத்து முழுமுதலை | | அந்நெறியை யமரர்தொழும் | | நாயகனை யடியார்கள் | | செந்நெறியைத் தேவர்குலக் | | கொழுந்தைமறந்திங்ஙனம்நான் | | என்னறிவான் பிரிந்திருக்கேன் | | என்ஆரூர் இறைவனையே. | | 8 |
கு-ரை: வலிமை, இங்கு பின்னிடாமை மேற்று. முன், 'முனிந்து' என்றதனால், பின், 'உகந்து' என்பது பெறப்பட்டது. "உகந்த" என்றது, தன் காரியம் தோன்ற நின்றது. 8. பொ-ரை: பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறியாய் உள்ள பிரமனும், மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழுமுதற் பொருளானவனும், அப்பொருளை அடையும் நெறியாய் உள்ளவனும், ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும், எல்லாத் தேவருள்ளும் சிறந்த தேவனும், தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து, நான், எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன். கு-ரை: "முழுமுதல்" என்றது எல்லாப் பொருள்களையும் நோக்கியும், "நாயகன்" என்றது தேவர்களை நோக்கியும், "தேவர்குலக்கொழுந்து" என்றது, இங்ஙனம் வேறாயினும், தேவருள் ஒருவனாயும் நிற்றல் நோக்கியும் என்க. சொற்சுருக்கம் நோக்கி, "அந்நெறியை" என்கின்றார் பொருள் இனிது விளங்குதற்பொருட்டு, "முழுமுதலை" என்றதனை அடுத்து நிற்க வைத்தார். 'முழுமுதல்' என்னும் தன்மை விளங்குதல் வேண்டி, 'அப்பொருள்' என, வேறு போலக் கூறப்பட்டது. "அடியார்கள் செந்நெறியை" என்றதன் முன்னிற்கற்பாலதாய, 'தேவர்குலக் கொழுந்து' என்பது செய்யுள் நோக்கி அதன் பின்னின்றது. மேலைத் திருப்பாடல்களிலெல்லாம், சொல்லெச்சமாய் எஞ்சி நின்ற, 'இங்ஙனம்' என்பது ஈண்டு, எஞ்சாது தோன்றிநின்றது.
|