பக்கம் எண் :

852
 
528.வங்கமலி கடல்நஞ்சை

வானவர்கள் தாம்உய்ய

நுங்கிஅமு தவர்க்கருளி

நொய்யேனைப் பொருட்படுத்துச்

சங்கிலியோ டெனைப்புணர்த்த

தத்துவனைச் சழக்கனேன்

எங்குலக்கப் பிரிந்திருக்கேன்

என்ஆரூர் இறைவனையே.

11


இன்பத்தைத் தந்து, அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி, யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு, மாவடுவின் வகிர்போலும், ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை, அறிவில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.

கு-ரை: "ஏழிசையாய்" முதலிய மூன்றிடத்தும் வந்த ஆக்கங்கள் உவமை குறித்து நின்றன. உம்மை, எச்சத்தொடு சிறப்பு. "துரிசு" என்றது. பரவையாரையும், சங்கிலியாரையும் காதலித்தமையும், அவைகாரணமாகச் செய்த சிலவற்றையும், ஆண்டமையாவது, தீருவாரூரிலே குடியேற்றிப் பணிசெய்யவைத்து, அருள்கள் பல செய்தமை. "ஏழையேன்" என்றது வாளா பெயராய் நின்றது. 'இருக்கேனோ' என்னும் ஓகாரம், எஞ்சி நின்றது.

11. பொ-ரை: தேவர்கள் பிழைத்தற்பொருட்டு, மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு, அமுதத்தை அவர்கட்கு அருளினவனும், சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி, என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்

கு-ரை: "அருளி" என்னும் எச்சம் எண்ணின்கண் வந்த தாதலின், அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது. சங்கிலியாரோடு கூட்டு வித்ததும் திருவாரூர் இறைவனது திருவிளையாட்டே எனக் கருது