529. | பேரூரு மதகரியின் | | உரியானைப் பெரியவர்தம் | | சீரூருந் திருவாரூர்ச் | | சிவனடியே திறம்விரும்பி | | ஆரூரன் அடித்தொண்டன் | | அடியன்சொல் அகலிடத்தில் | | ஊரூர னிவைவல்லார் | | உலகவர்க்கு மேலாரே. | | 12 |
திருச்சிற்றம்பலம்
கின்றாராதலின், 'சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனாகிய என் ஆரூர் இறைவன்' என்றார். 'பிரிந்திருந்தமையின் உண்மையன்பு இல்லேன்' என்பார், 'சழக்கனேன்' என்று அருளினார். 12. பொ-ரை: செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி, புகழ்மிகுந்த மதயானையின் தோலையுடைய அவனை, அவன் அடித்தொண்டனாகிய, அவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப்பாடல்களைப் பாடவல்லவர், உலகர் எல்லார்க்கும் மேலானவராவர். கு-ரை: "பேரூரும்" என்றதற்கு, 'பெரிதும் மிக்குப் பாய்கின்ற' என, மதத்திற்கு அடையாக உரைத்தலுமாம். "கரியினுரியான்" என்றதும், "ஆரூரன்" என்றதும், சுட்டுப்பெயராய் நின்றன. "பெரியவர்" என்றது தேவாசிரியனில் உள்ள திருக்கூட்டத்தவரை. "சிவனடியே" என்றவிடத்து, 'சேர்' என்பது வருவிக்க. 'சிவனடிசேர்' என்பதே பாடம் என்றலும் ஒன்று. "அடியன்" என்றது, வாளா பெயராயிற்று. அகலிடத்தில் எங்கும் செல்லுதல், இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களை வணங்க வேண்டி என்க. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் மின்னொளிர்செஞ் சடையானை வேதமுதல் ஆனானை மன்னுபுகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிகநினைந்து பன்னியசொற் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் என்னுமிசைத் திருப்பதிகம் எடுத்தியம்பி யிரங்கினார். 273 - தி. 12 சேக்கிழார் |
|