52. திருவாலங்காடு பதிக வரலாறு: சுவாமிகள். சங்கிலியாரைப் பிரிந்து திருவொற்றியூரை நீங்கியதால் இரு கண்களையும் இழந்து, வழிப்போவோர் வழி காட்ட. திருவெண்பாக்கம் சென்று தொழுது, பெருமான் அருளால் ஊன்றுகோல் பெற்று, பழையனூருழைச் சென்று, காரைக் காலம்மையார் தலையால் நடந்த தலம் என்று திருவாலங்காட்டை மிதியாது அதன் அயலில் நின்று பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 283) குறிப்பு: இத்திருப்பதிகம், திருவாரூரில் உள்ள அடியவர் திருக்கூட்டத்தை அகன்று நின்ற நிலையை நினைந்து, அதனை விரையச் சென்று அடையவிரும்பி அருளிச்செய்தது. பண்: பழம்பஞ்சுரம் பதிக எண்: 52 திருச்சிற்றம்பலம் 530. | முத்தா முத்தி தரவல்ல | | முகிழ்மென் முலையாள் உமைபங்கா | | சித்தா சித்தித் திறங்காட்டுஞ் | | சிவனே தேவர் சிங்கமே | | பத்தா பத்தர் பலர்போற்றும் | | பரமா பழைய னூர்மேய | | அத்தா ஆலங் காடாஉன் | | னாடியார்க் கடியேன் ஆவேனே. | | 1 |
1. பொ-ரை: இயல்பாகவே கட்டில்லாதவனே, கட்டுற்ற உயிர்கட்கெல்லாம் வீடளிக்கவல்ல, அரும்புகின்ற மெல்லிய தனங்களை யுடையாளாகிய உமையவளது பாகத்தையுடையவனே, சித்திகளை எல்லாம் உடையவனே, அச்சித்திகளை அடையும் வழியைக் காட்டுகின்ற சிவபெருமானே, தேவர்களாகிய விலங்குகட்டுச் சிங்கம் போல்பவனே, அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே, அன்புடையார் பலரும் போற்றும் கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் என்றும் உள் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
|