பக்கம் எண் :

855
 
531.

பொய்யே செய்து புறம்புறமே

திரிவேன் றன்னைப் போகாமே

மெய்யே வந்திங் கெனையாண்ட

மெய்யாமெய்யர் மெய்ப்பொருளே

பையா டரவம் அரைக்கசைத்த

பரமா பழைய னூர்மேய

ஐயா ஆலங் காடாஉன்

னடியார்க் கடியேன் ஆவேனே.

2


கு-ரை: 'பற்றா' என்பது, 'பத்தா' என மருவிற்று. "ஆவேனே" என்னும் ஏகாரம், தேற்றம். சுவாமிகள், முன்னரே அடியார்க்கடியராயினமையின், இதற்கு இவ்வாறுரைத்தலே திருவுள்ளமாதல் அறிக. திருவாலங்காடு பழையனூரைச் சார்ந்த காடாதல் பற்றி, அதனை விரும்பியவாறாக அருளினார்; முன்னை ஆசிரியர் இருவர் தாமும் இவ்வாறே அருளினமை காண்க.

இறைவனை இவ்வாறு பல பெயர்களால் விளித்தது, அவனைப் பராவுதற் பொருட்டு; எனவே, தேவர்ப்பராவும் பாடல்களுக்கு இஃது இயல்பாதல் தெளியப்படும்.

2. பொ-ரை: மனத்தொடு பொருந்தாத செயல்களையே செய்து, அதனால் உனக்கு மிகவும் சேய்மையிலே திரிவேனாகிய என்னை, அங்ஙனம் அகன்றொழியாதவாறு தடுத்து இவ்வுலகில் நேரே வந்து என்னை ஆட்கொண்ட மெய்ம்மையுடையவனே, மெய்ம்மை யுடையவர்க்கு மெய்ப்பொருளாய் உள்ளவனே, படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை அரையிற் கட்டிய கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழவேன்.

கு-ரை: "போகாமே" என்றதன்பின், 'தடுத்து' என்பது வருவிக்க. நேரே வந்து ஆண்ட அருமையை எடுத்து ஓதுகின்றாராகலின், 'என்னை' என மறித்தும் வலியுறுத்துக் கூறினார். இறைவன் நாவலூரர்பால் மெய்யனாயது, 'தத்தாள்வோம்' எனக் கயிலையில் அருளியவாறே வந்து ஆண்டது.

3. பொ-ரை: தூண்ட வேண்டாது ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே, வணங்குவாரது துன்பத்தை நீக்குபவனே,