பக்கம் எண் :

856
 
532.

தூண்டா விளக்கின் நற்சோதீ

தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்

பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்

பொடியாச் செற்ற புண்ணியனே

பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்

பரமா பழைய னூர்மேய

ஆண்டா ஆலங் காடாஉன்

னடியார்க் கடியேன் ஆவேனே.

3

533.

மறிநே ரொண்கண் மடநல்லார்

வலையிற் பட்டு மதிமயங்கி

அறிவே யழிந்தேன் ஐயாநான்

மையார் கண்ட முடையானே



எலும்பையே அணியாகப் பூண்டவனே, முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்த அறவுருவினனே, முன்பு செய்யப்பட்ட, அழுந்துதற்கு இடமான வினைகளாகிய அவற்றை நீக்கியருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.

கு-ரை: தூண்டா விளக்கு. இல்பொருளுவமை. 'விளக்கின்' என்ற இன்னுருபு, ஈறு தொகுத்தலாய்நின்ற, 'நல்ல' என்னும் குறிப்புப் பெயரெச்சத்தோடு முடிந்தது. இறைவன் பிறர் அறிவிக்க வேண்டாது, தானே அறியும் அறிவினனாதலின், "தூண்டா விளக்கின் நற்சோதீ" என்று அருளினார். "புரமூன்றும் செற்ற புண்ணியன்" உள்ளுறை நகை போல நின்று, தக்கதே செய்தமையைக் குறித்தது. 'பண்டு' என்பது நீட்டலாயிற்று. பண்டையவற்றை, 'பண்டு' என்று அருளினார். ஆண்டான் - தலைவன்.

4. பொ-ரை: தலைவனே, கருமைபொருந்திய கண்டத்தையுடையவனே, தீர்க்க இயலாத வினைகளையெல்லாம் தீர்த்தருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே, அடியேன், மான்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய, இளைய, அழகிய மாதர் ஆசையாகிய வலையில் அகப்பட்டு, அறிய வேண்டுவன வற்றை அறியாது, அறிவு அடியோடே கெட்டேன்; அவ்வாறே