| பறியா வினைக ளவைதீர்க்கும் | | பரமா பழைய னூர்மேய | | அறிவே யாலங் காடாஉன் | | னடியார்க் கடியேன் ஆவேனே. | | 4 |
534. | வேலங் காடு தடங்கண்ணார் | | வலையுட் பட்டுன் நெறிமறந்து | | மாலங் காடி மறந்தொழிந்தேன் | | மணியே முத்தே மரகதமே | | பாலங் காடீ நெய்யாடீ | | படர்புன் சடையாய் பழையனூர் | | ஆலங் காடா உன்னுடைய | | அடியார்க் கடியேன் ஆவேனே. | | 5 |
இனியுங் கெட்டொழியாது, உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். கு-ரை: "மதி" என்றது புத்தியை. "அறிவே" என்னும் தேற்றேகாரம், 'முற்றிலும்' என்னும் பொருளைத் தந்தது. 5. பொ-ரை: மாணிக்கம் போல்பவனே, முத்துப் போல்பவனே, மரகதம் போல்பவனே, பால் முழுக்கு ஆடுபவனே, நெய் முழுக்கு ஆடுபவனே, விரிந்த புல்லிய சடையை யுடையவனே, பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் வேல்போலும், பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகப்பட்டு, உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து, மயக்கம் மிகுந்து என்னையே மறந்தொழிந்தேன்; இனி அவ்வாறு இராது, என்றும் உன் அடியார்க்கு அடியனாகியே வாழ்வேன். கு-ரை: சிவபிரான், நெறி சொல்லியது, முதல் நூலில் என்க. முன்னர், "நெறிமறந்து" என்றதனால், பின்னர் "மறந்தொழிந்தேன்" என்றது, தம்மையாயிற்று. தம்மை மறந்தமையாவது, திருவாரூரையும், வீதிவிடங்கப் பெருமானையும், அடியவர் திருக்கூட்டத்தையும் நினைக்க மறந்தமை.
|