535. | எண்ணார் தங்கள் எயில்எய்த | | எந்தாய் எந்தை பெருமானே | | கண்ணாய் உலகங் காக்கின்ற | | கருத்தா திருத்த லாகாதாய் | | பண்ணார் இசைக ளவைகொண்டு | | பலரும் ஏத்தும் பழையனூர் | | அண்ணா ஆலங் காடாஉன் | | னடியார்க் கடியேன் ஆவேனே. | | 6 |
536. | வண்டார் குழலி உமைநங்கை | | பங்கா கங்கை மணவாளா | | விண்டார் புரங்கள் எரிசெய்த | | விடையாய் வேத நெறியானே | | பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் | | பரமா பழையனூர்மேய | | அண்டா ஆலங் காடாஉன் | | னடியார்க் கடியேன் ஆவேனே. | | 7 |
6. பொ-ரை: உன்னை மதியாதவரது மதில்களை அழித்த என் தந்தையே, என் தந்தைக்கும் பெருமானே, உலகத்திற்குக் கண்ணாய் நின்று அதனைக் காக்கின்ற முதல்வனே, குற்றமில்லாதவனே, பண்பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர்த் தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். கு-ரை: "உலகு" என்றது, உயிர்களை. அவற்றிற்குக் கண்ணாதலாவது, 'கட்டு, வீடு' என்னும் இருநிலையினும் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தல். "திருத்தல் ஆகாதாய்" என்றது, 'திருத்துதல் உண்டாகாத இயல்பினனே' என்னும் பொருட்டாய், குற்றம் இன்மையைக் குறித்தது. 7. பொ-ரை: வண்டுகள் நிறைந்த கூந்தலையுடையவளாகிய 'உமை' என்னும் நங்கைதன் பாகத்தையுடையவனே, கங்கைக்குக் கணவனே, பகைத்தவரது ஊர்களை எரித்த இடப வாகனனே, வேத
|