பக்கம் எண் :

859
 
537.

பேழ்வாய் அரவின் அணையானும்

பெரிய மலர்மேல் உறைவானும்

தாழா துன்றன் சரண்பணியத்

தழலாய் நின்ற தத்துவனே

பாழாம் வினைக ளவைதீர்க்கும்

பரமா பழைய னூர்தன்னை

ஆள்வாய் ஆலங் காடாஉன்

னடியார்க் கடியேன் ஆவேனே.

8


நெறியை உடையவனே, முன்பு செய்யப்பட்ட, அழுந்துதற்கு இடமான வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தேவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.

கு-ரை: "பண்டாழ் வினைகள்" என்றதற்கு, மேலே (தி. 7 ப. 52. பா. 3) உரைக்கப்பட்டது. " அண்டன்" என்றது, 'தேவன்' என்னும் அளவாய் நின்றது.

8. பொ-ரை: பெரிய வாயையுடைய பாம்பாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும், பெரிதாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் விரைவில் உனது முதன்னையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு, தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளானவனே, உயிர், பயனின்றிக் கெடுதற்கு ஏதுவான வினைகளை தீக்குகின்ற கடவுளே, பழையனூரை ஆள்கின்றவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.

கு-ரை: "அரவின்" என அல்வழிக்கண் சாரியை வந்தது. ஆயிரம் இதழ்களை யுடைமையின், "பெரிய மலர்" என்றார்.

பேழ் வாய் அரவின் அணையும், பெரிய மலர் இருக்கையும் அவர்தம் பெருமையைக் குறிப்பான் உணர்த்தின. சரண்பணிதல், தன் காரணந் தோற்றி நின்றது.