538. | எம்மான் எந்தை மூத்தப்பன் | | ஏழேழ் படிகால் எமையாண்ட | | பெம்மான் ஈமப் புறங்காட்டிற் | | பேயோ டாடல் புரிவானே | | பன்மா மலர்க ளவைகொண்டு | | பலரும் ஏத்தும் பழையனூர் | | அம்மா ஆலங் காடாஉன் | | னடியார்க் கடியேன் ஆவேனே. | | 9 |
539. | பத்தர் சித்தர் பலர்ஏத்தும் | | பரமன் பழைய னூர்மேய | | அத்தன் ஆலங் காடன்றன் | | அடிமைத் திறமே அன்பாகிச் |
9. பொ-ரை: என் தந்தை, என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ் தலைமுறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடல் செய்பவனே, பல சிறந்த மலர்களைக்கொண்டு பலரும் வணங்குகின்ற, பழையனூர்க்குத் தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். கு-ரை: "ஏழேழ்", உம்மைத்தொகை. இருவகை ஏழ்தலை முறைகளாவன, தந்தை வழியில் ஏழ் தலைமுறையும், தாய் வழியில் ஏழ்தலை முறையுமாம். 'மரபிரண்டும் சைவநெறி வழிவந்த' எனத் திருஞானசம்பந்தரது குடிபற்றிச் சேக்கிழார் அருளியவாறு அறிக. (தி. 12 திருஞான. புரா. 17) இவற்றோடு தந்தைதன் தாய்வழியில் ஓர் ஏழ்கூட்டி. 'மூவேழ் தலை முறை' என்றலும் உண்டு. "மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை - ஆழா மேஅருள் அரசே போற்றி" என்ற திருவாசகத்தைக் காண்க. (தி. 8 போற்றித் திருவகவல் - 119) இடுகாடாகிய புறங்காடும் உண்மையின், "ஈமப் புறங்காடு" என விதந்தருளிச் செய்தார். 10. பொ-ரை: அடியார் பலரும், சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும், பழையனூரை விரும்பிய தலைவனும், ஆகிய திருவாலங்
|