பக்கம் எண் :

861
 

சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்

சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்

பத்தும் பாடி ஆடுவார்

பரமன் னடியே பணிவாரே.

10

திருச்சிற்றம்பலம்


காட்டு இறைவனது அடிமைத் திறத்தின் கண்ணே அன்புடையவராய், சித்தர்களும் தங்கள் சித்தத்திலே மறவாது வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம் மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர், சிவபெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர்.

கு-ரை: 'அவன் அடிநிழலைப் பெறுவர்' என்றபடி. "பலர்" என்றதனை, "பத்தர்" என்றதனோடுங்கூட்டுக. 'அன்பு' என்னும் பண்புப்யெர், பண்பியின்மேல் நின்றது. 'சித்தரும் சித்தம் வைக்கும் புகழ், சிவபிரானது திருவருளால் வாய்க்கப்பெற்றவன் என்பது குறிப்பு. சித்தர் சித்தம் வைத்தமையை, பெருமிழலைக் குறும்ப நாயனாரது வரலாற்றால் அறிக. "சிறுவன்" என்பதில் உள்ள சிறுமை, 'அடிமை' என்னும் பொருட்டு. 'அன்பாகிப் பாடி ஆடுவார்' என இயையும்.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

அங்கணர்தம் பதியதனை அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணை சூழ் பழையனூர் ருழைஎய்தித்
தங்குவார் அம்மை திருத் தலையாலே வலங்கொள்ளும்
திங்கள்முடி யார் ஆடும் திருவாலங் காட்டினயால்.

முன்னின்று தொழுதேத்தி முத்தாவென் றெடுத்தருளிப்
பன்னுமிசைத் திருப்பதிகம் பாடிமகிழ்ந் தேத்துவார்
அஞ்சின்று வணங்கிப்போய்த் திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக் காஞ்சிமா நகர்அணைந்தார்.

- தி. 12 சேக்கிழார்