53. திருக்கடவூர் மயானம் பதிக வரலாறு: சுவாமிகள், திருநள்ளாற்றிறைவரைத் தொழுது திருக்கடவூர் சென்று பணிந்து, திருக்கடவூர் மயானம் வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புா.145) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது தன்மைகளைச் சிறப்பித்து அருளிச்செய்தது. பண்: பழம்பஞ்சுரம் பதிக எண்: 53 திருச்சிற்றம்பலம் 540. | மருவார் கொன்றை மதிசூடி | | மாணிக் கத்தின் மலைபோல | | வருவார் விடைமேல் மாதோடு | | மகிழ்ந்து பூதப் படைசூழத் | | திருமால் பிரமன் இந்திரற்குந் | | தேவர் நாகர் தானவர்க்கும் | | பெருமான் கடவூர் மயானத்துப் | | பெரிய பெருமா னடிகளே. | | 1 |
1. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும், திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின் மேல் ஒரு மாணிக்கமலை வருவதுபோல விடையின்மேல் வருவார்; 'திருமால், பிரமன், இந்திரன்' என்ற பெருந்தேவர்கட்கும், 'மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்' என்பவர்கட்கும் அவரே தலைவர். கு-ரை: செந்திருமேனியராதலைக்கருதி, இறைவரை, மாணிக்க மலை போல்வார் என அருளினமையின், வெள்ளியதாதல் பற்றி விடையை, வெள்ளிமலைபோல்வது என அருளிச்செய்தல் திருவுள்ள மாதல் பெறப்படும். 'மாணிக்கத்தின்' என்ற இன்சாரியை, அல்வழிக் கண் வந்தது. "பெருமான்' பன்மையொருமை மயக்கம். 'மயானம்'
|