பக்கம் எண் :

863
 
541.விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்

மார்பர் வேத கீதத்தர்

கண்ணார் நுதலர் நகுதலையர்

கால காலர் கடவூரர்

எண்ணார் புரமூன் றெரிசெய்த

இறைவர் உமையோ ரொருபாகம்

பெண்ணா ணாவர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

2

542.

காயும் புலியி னதளுடையர்

கண்டர் எண்டோட் கடவூரர்

தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்

தாமே யாய தலைவனார்



என்பது கோயிலின் பெயர்.'மயானம்' என்னும் பெயருடைய கோயில்கள் வேறு தலங்களிலும் உள. 'பெருமானடிகள்' என்பது ஆண்பால் தேவர்க்குச் சொல்லப்படுவதொரு பெயராதலன், மாதேவனாகிய சிவபெருமான், பெரிய பெருமானடிகளாதல் அறிக. இது பற்றியே திருவாதவூரடிகள், 'தேவதேவன்' என்பதே சிவபெருமானுக்குரிய சிறப்புப் பெயராக அருளியுள்ளார் என்க. (தி. 8 திருவா. கீர்த்தி. 122)

2. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை உடையவரும், வேதத்தை உடைய இசையைப் பாடுகின்றவரும், கண் பொருந்திய நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத் தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகப் கொண்டவரும, தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும், உமை ஒருபாகமும் தாம் ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர்.

கு-ரை: "பாகம்" என்றதனை, "ஓர்" என்றதனோடுங்கூட்டி, "பாகம்" என்பன இரண்டன் பின்னும், 'தாம், ஆய்' என்பன வருவித்து உரைக்க. 'உமையோடொருபாகம்' எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். 'ஊர், திருக்கடவூர்' எனப்பட்டமையால், மயானம் அதனைச் சார்ந்ததாயிற்று.

3. பொ-ரை: பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய