பக்கம் எண் :

864
 

பாயும் விடையொன் றதுவேறிப்

பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி

பேய்கள் வாழும் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

3

543.நறைசேர் மலர்ஐங் கணையானை

நயனத் தீயாற் பொடிசெய்த

இறையா ராவர் எல்லார்க்கும்

இல்லை யென்னா தருள்செய்வார்

பறையார் முழவம் பாட்டோடு

பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்

பிறையார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

4


சிவபெருமானார், சினங் கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவா; நீல கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை யுடையவர்; திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும் தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர்.

கு-ரை: 'அதளுடை அகண்டர்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 'பலிதேர்ந்து உண்ணும் பரமேட்டி' என்பது, நகைச்சுவை படக் கூறிய தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது, பரமேட்டி, பன்மை யொருமை மயக்கம். 'மயானம்' என்னும் பெயரானே அதற்குரிய அடைபுணர்த்தற்கு இயையுண்மையின். 'பேய்வாழ் மயானம்' எனச் சிறப்பித்தருளினார்.

4. பொ-ரை: ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன் பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்புகளையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற் சாம்பலாக்கிய இறைவராவர்; 'இல்லை' என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை யுடையவர்.