544. | கொத்தார் கொன்றை மதிசூடிக் | | கோணா கங்கள் பூணாக | | மத்த யானை யுரிபோர்த்து | | மருப்பு மாமைத் தாலியார் | | பத்தி செய்து பாரிடங்கள் | | பாடி யாடப் பலிகொள்ளும் | | பித்தர் கடவூர் மயானத்துப் | | பெரிய பெருமா னடிகளே. | | 5 |
545. | துணிவார் கீளுங் கோவணமுந் | | துதைந்து சுடலைப் பொடியணிந்து | | பணிமே லிட்ட பாசுபதர் | | பஞ்ச வடிமார் பினர்கடவூர்த் |
கு-ரை: உலகின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு உலகின்பத்தையும், வீட்டின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு வீட்டின்பத்தையும் தருதலின், 'எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்' என்று அருளினார். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" (தி. 6 ப. 23 பா. 1) என்று அருளியது காண்க. 5. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும் பிறையையும் திருமுடியிற்சூடி, சொல்லுந் தன்மையுடைய பாம்புகள் அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத் தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பையும், ஆமையின் ஓட்டையும் உடைய தாலியையுடையவராய், பூதகணங்கள் அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர். கு-ரை: 'மருப்பு' என்றது பன்றியினுடையது என்பது அறியப்பட்டதாகலின், கிளந்து கூறாராயினார். "ஆமை", ஆகு பெயர். "ஆமை" என்றவிடத்தும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரித்து 'உடைய' என்பதனை வருவித்து முடிக்க. தாலியாவது, வெறு வடமாக அணியப்படாது எவற்றையேனும் கோத்து அணியப்படுவது என்க. 6. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட
|