| திணிவார் குழையார் புரமூன்றுந் | | தீவாய்ப் படுத்த சேவகனார் | | பிணிவார் சடையார் மயானத்துப் | | பெரிய பெருமா னடிகளே. | | 6 |
546. | காரார் கடலின் நஞ்சுண்ட | | கண்டர் கடவூ ருறைவாணர் | | தேரார் அரக்கன் போய்வீழ்ந்து | | சிதைய விரலால் ஊன்றினார் | | ஊர்தா னாவ துலகேழும் | | உடையார்க் கொற்றி யூர்ஆரூர் | | பேரா யிரவர் மயானத்துப் | | பெரிய பெருமா னடிகளே. | | 7 |
கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்; பஞ்ச வடியை அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்; கட்டிய நீண்ட சடையையுடையவர். கு-ரை: பாசுபத வேடம், கபாலத்தைக் கையில் ஏந்துதல். பஞ்ச வடி - அகன்ற கயிறு; இது மயிரால் திரிக்கப்படுவது. இறந்த தேவர்களது தலைகளையும், எலும்புகளையும் சிவபிரான் அணிகலமாக அணிதல்போல், அவர்களது மயிரினைக் கயிறாகத் திரித்துப் பூணூலாக அணிவன்; இதனை மாவிரத சமயத்தார் சிறந்தெடுத்து அணிவர்; இவ்வாறே கபாலம் ஏந்துதலைப் பாசுபத சமயத்தர் சிறந்தெடுத்துக் கொள்வர் என்க. "கடவூர்" என்றதனை, "மயானம்" என்றதனோடுங் கூட்டுக. 7. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்; திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக் கீழேபோய்
|