பக்கம் எண் :

867
 
547.வாடா முலையாள் தன்னோடும்

மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்

கோடார் கேழற் பின்சென்று

குறுகி விசயன் தவமழித்து

நாடா வண்ணஞ் செருச்செய்து

ஆவ நாழி நிலையருள்செய்

பீடார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

8


வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர்.

கு-ரை: 'கார்க் கடல், ஆர் கடல்' எனத் தனித்தனி சென்றியையும் 'கருமை பொருந்திய கடல்' என்றே உரைப்பினும் அமையும். 'ஒற்றியூர், ஆரூர்' என்னும் பெயர்களை, நகைதோன்ற, அவ்வாறு பொருள்படுத்தருளினார். "பேர் ஆயிரவர்" என்றது, ஒரு பெயரில்லாதவர் என்னும் குறப்பினது.

8. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களை யுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர்புரிந்து, பின்பு அவனுக்கு அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர்.

கு-ரை: "வாடா முலையாள் தன்னோடு வேடுவனாய்ச் சென்று" என்றதனால், அவள் வேடிச்சியாயினமை பெறப்பட்டது. சிவபிரான் அருச்சுனனுக்கு அளித்த பாசுபதக் கணையாலே, அவன் வில் வன்மை நிலைபெற்றமையின், "ஆவநாழி நிலையருள் செய்" என்று அருளினார். 'பீடார்ந்தவர், சடைமுடியர்' என வேறு வேறாக ஓதற் பாலதனை, இவ்வாறு, ஒன்றாகத் தொகுத்தோதியருளினார் என்க. "வேடுவனாய்" என்றது, பன்மை யொருமை மயக்கம்.