548. | வேழ முரிப்பர் மழுவாளர் | | வேள்வி யழிப்பர் சிரமறுப்பர் | | ஆழி யளிப்பர் அரிதனக்கு | | ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர் | | ஏழை தலைவர் கடவூரில் | | இறைவர் சிறுமான் மறிக்கையர் | | பேழைச் சடையர் மயானத்துப் | | பெரிய பெருமா னடிகளே. | | 9 |
549. | மாட மல்கு கடவூரின் | | மறையோர் ஏத்து மயானத்துப் | | பீடைதீர அடியாருக் | | கருளும் பெருமா னடிகள்சீர் | | நாடி நாவ லாரூரன் | | நம்பி சொன்ன நற்றமிழ்கள் | | பாடு மடியார் கேட்பார்மேற் | | பாவ மான பறையுமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
9. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்டு அறம் உரைப்பர்; மங்கை யொருத்திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர். கு-ரை: வேண்டும் சொற்கள், ஆற்றலால் வந்தன. இறை - இறுத்தல்; தங்குதல். பாம்பு முதலியன அடங்கிக் கிடத்தலின், "பேழைச் சடை" என்று அருளினார். 10. பொ-ரை: மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது
|