பக்கம் எண் :

869
 

புகழை, திருநாவலூரில் தோன்றிய, 'ஆரூரன்' என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்டிகின்ற அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம்.

கு-ரை: 'நாவலூர்' என்பதனை, 'நாவல்' என்று அருளினார். 'நம்பி' என்பது பெருமைபற்றிப் புணர்க்கப்படும் பெயராகலின் அதனை வேறாக ஓதுதலும் பொருந்துவதாயிற்று. 'ஆரூர நம்பி' என ஈறு கெட்டு வாராது, இயல்பாகவே வந்தமையின், 'ஆரூரனாகிய நம்பி' என உரைத்தல் கூடாமையறிக. "கேட்பார்" என வாளா அருளினாரேனும், 'கேட்கும் அடியார்' என்றலே திருவுள்ளம் என்க. 'பாடு மடியார் கேட்குமடியார்' என்பது உம்மைத் தொகை.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்
 
அங்கணரைப் பணிந்தேத்தி

அருளினால் தொழுதுபோய்

மங்குலணி மணிமாடத்

திருக்கடவூர் வந்தெய்தித்

திங்கள்வளர் முடியார்தம்

திருமயா னமும்பணிந்து

பொங்குமிசைப் பதிகமரு

வார்கொன்றை யெனப்போற்றி.

145

- தி. 12 சேக்கிழார்.