பக்கம் எண் :

87
 

பாடுவார் பசிதீர்க்கும் பரமேஸ்வரன் உறையும் பதிகளை இப்படி இயற்கைத் தன்மையோடு பாடுவதில் நிகரற்று விளங்குகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

அஞ்சொலார் பயிலும் ஆரூர்:

ஆரூர் அப்பனிடத்தே ஆட்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொய்யாய வாழ்வை மெய்யென் றெண்ணும் எண்ணம் கொண்டவரில்லை. அதற்காகப் பல இடங்களில் இரங்கிக் கூறுகிறார்.

தஞ்சொலார் அருள்ப யக்குந் தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள் நாதனை நணுகுவாரே.

(தி. 7 ப. 8 பா. 10)

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தருக்கும், நாவுக்கரசருக்கும் காலத்தால் பிற்பட்ட சுந்தரர் பாடியருளிய தேவாரப் பாடல்கள் பண் முறையோடுகூட வகுக்கப்பட்டுள்ளன.

அரசராகிய நரசிங்க முனையரையர் விரும்பி ஏற்ற புதல்வராக இருந்தும் சமயவிதி வழாது கடைப்பிடித்தார்.

பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
வருமுறை மரபில் வைகி வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்(து)
அருமறை முந்நூல் சாத்தி அளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.

(தி. 12 தடுத். 6)

மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துட் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னனி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.

(தி. 12 தடுத். 19)

ஒருமணத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட்டு ஆண்டு கொண்ட பெருமானைக் கொண்டே இருமணத்தையும் கொண்ட