பக்கம் எண் :

88
 

வல்லாளர் நம்பியாரூரர்.

கற்பகத்தின் பூங்கொம்பாம் - காமன்தன் பெருவாழ்வாம் - பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமாம் - விற்குவளை மலர் பூத்த விரைக் கொடியாம் பரவையாரை மணமுடித்து வைத்தான் மகாதேவன். இந்நிகழ்ச்சியைத்தான் அற்புதமோ! சிவனருளோ! அறியேன் என்றதிசயிக்கிறார்.

பின்னும் ஞாயிறுகிழாரின் தவப்புதல்வி சங்கிலியாரை 'மேரு மலையின் மேம்பட்ட தவத்தான் - வெண்ணெய்நல்லூரில் யாரும் காண யான் ஆள உரியான் - உன்னை எனை இரந்தான்' என்று கூறி மணம் புரிவித்தான்.

மணவாழ்வு சலித்தபின் அழுக்கு மெய்கொடுன் திருவடியடைந்தேன். பிழுக்கை வாரியும் பால் கொள்வதல்லவா உலகியல். எனை நீயும் ஏற்றருள வேண்டும் என்று வாதாடி வென்றார் ஆரூரர்.

முடிவுரை:

தன்னைப் பற்றித் துரிசே செயும் தொண்டன் என்று கூறிக் கொள்ளும் வன்தொண்டர் வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம், எல்லியும் பகலும் பணியது செய்வேன் என்று தாழ்மையாகவும் வன்மையாகவும் கூறும் பாங்கு உள்ளத்தைத் தொடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

-குறள் 110

என்ற தெய்வ வள்ளுவர் வாக்கை நினைத்துத்தான் போலும்.

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்

காம கோபனைக் கண்ணுத லானைச்

சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்

தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்

அற்புதப்பழ ஆவணங் காட்டி

அடிய னாஎன்னை ஆளது கொண்ட

நற்ப தத்தைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

(தி. 7 ப. 68 பா. 6)