என்றருளுகிறார். பணியுமாம் என்றும் பெருமை என்பதற் கொப்ப, "நாவின் மிசை யரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்." (தி. 7 ப. 78 பா. 10) "அடியார் அடியார்கட் கெல்லாம் தொண்டே பூண் டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்" (தி. 7 ப. 24 பா. 4)
எனது தம் எளிமையைத் தெரிவித்துக் கொள்வார். பாடுவார் பசி தீர்த்து, பரவுவார் பிணியைக் களையும் பரம் பொருளைத் தோழமை கொண்ட பெருந் தொண்டர் பாடியருளிய தேவாரப் பாடல்களில் இன்னும் சிந்தையைச் செலுத்தி எண்ண எண்ண அரிய இன்பம் கிடைக்கும். அறிதோறும் நம்முடைய அறியாமை நம்மை நாணவைக்கும். நவில்தோறும் நலம்தரும் தேவாரப் பாடல்களை ஓதி உய்யவேண்டும். திருத்தொண்டத் தொகையருளி, அடியார் பெருமைகளையெல்லாம் விளக்கமுறச் சொன்ன சுந்தரமூர்த்தி சுவாமிகளை, நெஞ்சில் பதித்து வணங்குதல் நல்லது. "தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர்மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்." (தி. 12 மும்மை. பா. 60)
|