பக்கம் எண் :

884
 
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்

கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்

பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்

பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே.

4


யிருப்பவனே, 'நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும், நாவுக்கரையனும், நாளைப்போவானும், சூதாடுதலை நன்கு கற்ற மூர்க்கனும், நல்ல சாக்கியனும், சிலந்தியும், கண்ணப்பனும், கணம் புல்லனும்' என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும், அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து, வந்து, அடியேன், உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்.

கு-ரை: "குற்றம்" என்றது, உலகத்தார் கருத்து வகைபற்றி, அவ்வாற்றால் ஞானசம்பந்தர் செய்தது, பாண்டியன் சமணரைக் கழுவேற்றியதனை விலக்கா திருந்தது, நாவுக்கரசர் செய்தது, சமண சமயம் புக்கு முதல்வன் திருவருளை இகழந்து நின்றது. நாளைப் போவார் செய்தது, தில்லை நகருள்ளும், திருக்கோயிலுள்ளும் புக முயன்றது. மூர்க்கர் செய்தது, சூதாடியது. சாக்கியர் செய்தது, இலிங்கத் திருமேனியைக் கல்லால் எறிந்தது. சிலந்தி செய்தது வாய்நூலால் இலிங்கத் தின்மேற் கூடு வேய்ந்தது. கண்ணப்பர் செய்தவை, செருப்புக் காலை இலிங்கத் திருமேனியின் முடியில் வைத்ததும், வாய்நீரை அதன்மேல் உமிழ்ந்ததும், எச்சிற் படுத்த இறைச்சியைப் படைத்ததும். கணம்புல்லர் செய்தது, திருக்கோயிலில் தம் தலைமயிலை விளக்கென்று எரித்தது. இவர் தாம் இவற்றை, மனத்துக்கண் மாசிலராய் அருள்வழியானும், அன்புவழியானும் செய்தமையை உலகர் அறிய மாட்டாராக, நீ அறிந்து அருள்செய்தனை என்று அறிந்து உன்னை வந்து அடைந்தேன் என்றவாறு. இதனானே, தாம் இறைவனைப் பரவையார் பால் தூது செல்லுமாறு இரந்தமையும் குற்றமாகாமைக் காரணமும் புலப் படுத்தவாறாயிற்று. மேலைத் திருப்பாடலில் சண்டேசுர நாயனாருக்குச் செய்த திருவருளை நினைந்தருளி, அன்ன வாகப் பிற நாயன்மார்க்குச் செய்த திருவருட்டிறங்களை, இத்திருப் பாடலில் நினைந்து அருளிச் செய்தார் என்க. "சிலந்தி" என்றதும், கோச்செங்கட்சோழ நாயனாரையே யாதல் அறிக. 'என்ற' என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று.

திணைவிராய் எண்ணப்பட்டன, பன்மை பற்றி, 'இவர்கள்'