பக்கம் எண் :

885
 
564.கோல மால்வரை மத்தென நாட்டிக்

கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த

ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய

அமரர் கட்கருள் புரிவது கருதி

நீல மார்கடல் விடந்தனை யுண்டு

கண்டத் தேவைத்த பித்தநீ செய்த

சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

5

565.இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்

இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்

மயக்க மில்புலி வானரம் நாகம்

வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்



என உயர்திணை முடிபு கொண்டது. 'பொன்' என்னும் உவமை சிறப்புப்பற்றி வந்தது.

5. பொ-ரை: வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்கள், அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி, கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து, அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி, கருமை நிறைந்த, அக் கடல் விடத்தை உண்டு, அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே, நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்

கு-ரை: செய்யுளாகலின். 'அவர்' என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. "இரிய" என்றது, அதன் காரியமுந் தோன்ற நின்றது.

இது, நஞ்சினைஉண்டு தேவர்களைக் காத்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளிச்செய்தது.

6. பொ-ரை: வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இயக்கரும், கின்னரரும், இயமனும், வருணனும், அக்கினியும், இயங்குகின்ற வாயுவும், சூரியனும், சந்திரனும், வசுக்களும், ஏனைய தேவர்களும், அசுரர்களும், மற்றும் அறியாமை