பக்கம் எண் :

886
 

அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை

யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு

திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

6

566.போாத்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்

பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து

பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்

தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட

ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை

நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த

தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7


நீங்கின புலி, குரங்கு, பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும், தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: 'யமனொடு' என்பதும் பாடம். "இயங்கு" என்றதனை, "வளி" என்றதனோடு கூட்டுக. "மயக்கமில்" என்றதனை அஃறிணைக்கே ஓதினார். அவைகட்கு அவ் வியல்பு வாய்த்தல் அரிதாதல் நோக்கி. 'வானவர் தானவர்' என்பன, செய்யுள் நோக்கிப், பின் நின்றன. "அரிச்சித்தார்" என்றது முற்றெச்சம். பன்மை பற்றி உயர்திணையாற் கூறினார். இங்குக் கூறப்பட்டோர் பலரும் சிவபெருமானை வழிபட்டுத் தாம்தாம் வேண்டிய பயனைப் பெற்றமை, புராணங்கள் பலவற்றாலும், தலங்கள் பலவற்று ஐதிகங்களாலும் பலரும் நன்கறிந்தது.

இது, வழிபட்டோர் பலர்க்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

7. பொ-ரை: தூயவனே, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு, அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும், அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும்