567. | மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில் | | இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல் | | காவ லாளர்என் றேவிய பின்னை | | ஒருவன் நீகரி காடரங் காக | | மானை நோக்கியோர் மாநடம் மகிழ | | மணிமு ழாமுழக் கவருள் செய்த | | தேவ தேவநின் திருவடி யடைந்தேன் | | செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே. | | 8 |
பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு, ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில், அடக்கியும் அருள்செய்தாய்; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். கு-ரை: "போர்த்த" என்றது 'பொதிந்த' என்னும் பொருட்டாய் நின்றது; அதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது, கேள்வியது பெருமை, செவிகள்மேல் ஏற்றப்பட்டது. 'ஆடையைப் போர்த்து அருமறையை உபதேசிக்கப்பட்ட செவி' என்றுமாம். "அன்று" என்றதனை, "பார்த்தனுக்கு" என்றதற்குங் கூட்டுக. ஈண்டுக்கூறப்பட்டவை கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. இது, முனிவர் நால்வர்க்கும், அருச்சுனனுக்கும், பகீரதனுக்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது. 8. பொ-ரை: தேவதேவனே, வளவிய சோலைளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை, நீ, கரிந்த காடே அரங்கமாக, உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து. அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். கு-ரை: 'தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி, என்னும் தலைவர் உட்படத் திரிபுரத்தில் இருந்தவர் அனைவரும் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடவும், 'சுதன்மன், சுசீலன் சுபுத்தி' என்னும் மூவர்மட்டும் முன்போலவே சிவநெறியில் மாறாது நின்று சிவபிரானிடத்து அன்புபூண்டு ஒழுகினமையால்,
|