568. | அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத் | | தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து | | எறியு மாகடல் இலங்கையர் கோனைத் | | துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் |
சிவபெருமான் அவர்களைமட்டும் அழியாது காத்து, மேற் சொல்லியவாறு திருவருள் செய்தனன் என்க. இதனை "மூவார் புரங்கள் எரித்த அன்றுமூவர்க் கருள்செய்தார்" (தி. 1 ப. 69. பா. 1) எனவும், "திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்ததலையானை" (தி. 6 ப. 60 பா. 9) எனவும், "உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்டெய்யவல் லானுக்கே உந்தீபற" (தி. 8 திருவா, திருவுந்தி. 4) எனவும் ஆசிரியர் அனைவரும் சிறந்தெடுத்தோதிப் போற்றுமாறு காண்க. இவ்வரலாறு, காஞ்சிப் புராணத்து முப்புராரிக் கோட்டப் படலத்துள் விளங்கக் கூறப்படுதல் காண்க. திரிபுரத்தலைவர், 'தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி' என்போர் எனவும், திரிபுரத்தில் உய்ந்த மூவர், 'சுதன்மன், சுசீலன், சுபுத்தி' என்போர் எனவும் பிரித்தறிந்து கொள்க. சிவபிரான் திருக்கோயில்களில் துவார பாலகர்களாய் நிற்பவர் இவருள் இருவரே என்பது இத் திருப்பாடலால் இனிது விளங்குதல் காண்க, இவ்வரலாறு, 'உலகிற்குத் தீங்குகள் நேரினும், சிவபிரானைப் பற்றிநிற்பாரை அவை ஒன்றுஞ் செய்யா' என்பதனை இனிது விளக்கும். இது, முப்புரத்துள் வாழ்ந்த மூவர்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது. 9. பொ-ரை: வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட
|