பக்கம் எண் :

889
 

குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்

கோல வாளொடு நாளது கொடுத்த

செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

9

569.கம்ப மால்களிற் றின்னுரி யானைக்

காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்

செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை



சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே, அரிய திருவருளைச் செய்தும், அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: சமயங்களை 'ஆறு' என்றல் தொன்றுதொட்ட வழக்கு. இவைபற்றிக் கூறப்படுவன பல; அவற்றை ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க.

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கேமாதொரு பாக னார்தாம் வருவர்"

- சிவஞானசித்தி. சூ. 2. 25

என்றவாறு, எல்லாச் சமயங்களிலும் இருந்து அருள்பவன் சிவ பெருமானேயாகலின், "அறுவகைச் சமயத்து அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து" என்றருளினார். "அவ்வவர்" என்றது, 'அவரவருக்கு ஏற்ற பெற்றியான்' என்றவாறு, 'சமயம் அவரவர்க்கு' என்பது பாடம் அன்று. "புரிந்து" என்ற எச்சம் எண்ணுப் பொருட்டாகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது.

10. பொ-ரை: அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும், காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும், செம்