| உம்ப ராளியை உமையவன் கோனை | | ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந் | | தம்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ | | டைந்தும் வல்லவர் அருவினை யிலரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும், தேவர்களை ஆள்பவனும், உமையவளுக்குத் தலைவனும் ஆகிய, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி, அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர்; இது திண்ணம். கு-ரை: ஈற்றில் நிற்கற்பாலதாய, 'செழும்பொழில் திருப்புன் கூருளானை' என்பது, செய்யுள் நோக்கி இடைநின்றது. ஏகாரம், தேற்றம். ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | இருவரும் எழுந்து புல்லி | இடைவிடா நண்பி னாலே | டெருவரு மகிழ்ச்சி பொங்கத் | திருப்புன்கூர்ப் புனிதர் பாதம் | மருவினர் போற்றி நின்று | வன்றொண்டர் தம்பிரானார் | அருளினை நினைந்தே அந்த | ணாளனென் றெடுத்துப் பாடி. | - தி. 12 சேக்கிழார் |
|