571. | துன்னு வார்சடைத் தூமதி யானைத் | | துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப் | | பன்னு நான்மறை பாடவல் லானைப் | | பார்த்த னுக்கருள் செய்தபி ரானை | | என்னை இன்னருள் எய்துவிப் பானை | | ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப் | | புன்னை மாதவி போதலர் நீடூர்ப் | | புனித னைப்பணி யாவிட லாமே. | | 2 |
572. | கொல்லு மூவிலை வேலுடை யானைக் | | கொடிய காலனை யுங்குமைத் தானை | | நல்ல வாநெறி காட்டுவிப் பானை | | நாளு நாமுகக் கின்றபி ரானை |
உடையானை' என மாற்றியுரைக்க. ஒளியுடையதாயது, நெருப்புக் கண்ணினால் என்க. "கண்ணுதல்" என்றது, 'சிவபிரான்' என்னும் அளவாய் நின்றது. இத்திருப்பதிகத்துள், "பரமன்" முதலியவற்றை, 'இறைவன்' என்னும் பெயரளவினவாகக் கொள்க. 2. பொ-ரை: நெருங்கிய நீண்ட சடையின்கண் தூய்தாகிய பிறையைச் சூடினவனும், மயக்கம் வாராதவாறு உய்யும் நெறியைக் காட்டுகின்றவனும், உயர்ந்தோர் ஓதும் நான்கு வேதங்களைச் செய்ய வல்லவனும், அருச்சுனனுக்கு அருள் புரிந்த தலைவனும், அவ்வினிய அருளை என்னை எய்துவிப்பவனும், அயலாய் நிற்பார்க்கு அயலாய் நிற்பவனும் ஆகிய, புன்னையும் குருக்கத்தியும் அரும்புகள் மலர்கின்ற திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம். கு-ரை: 'துயக்குறாமை' என்னும் எதிர்மறை வினையெச்சம் ஈறுகுறைந்து நின்றது. "என்னை இன்னருள் எய்துவிப்பான்' என்றது, 'படையை ஊராடைவித்தான்' என்பதுபோல நின்றது. 'புன்னை மாதவி போதலர்' என, சினைவினை முதல்மேல் நின்றது. 3. பொ-ரை: கொல்லுதற் கருவியாகிய சூலத்தை உடையவனும், கொடிய இயமனையும் அழித்தவனும், நல்லனவாகிய நெறிகளையே காட்டுவிக்கின்றவனும், எந்நாளும் நாம் விரும்புகின்ற தலைவனும்,
|