| அல்ல வில்லரு ளேபுரி வானை | | ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க் | | கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் | | கூறி நாம்பணி யாவிட லாமே. | | 3 |
573. | தோடு காதிடு தூநெறி யானைத் | | தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப் | | பாடு மாமறை பாடவல் லானைப் | | பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே | | ஆடு மாமயில் அன்னமொ டாட | | அலையு னற்கழ னித்திரு நீடூர் | | வேட னாயபி ரானவன் றன்னை | | விரும்பி நாம்பணி யாவிட லாமே. | | 4 |
துன்பம் இல்லாத திருவருளைச் செய்பவனும் ஆகிய, முழுகுதற்குரிய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம். கு-ரை: நன்னெறிதான், அவரவர் நிலைக்கேற்பப் பலவாய் நிற்குமாதலின், "நல்லவாம்" எனப் பன்மையாக அருளினார். அவைகளைப் பெரும்பான்மையும் பிறர்வாயிலாகவே உணர்த்துதலின், "காட்டுவிப்பானை" என்று அருளினார். "இல்லருள்", இல்லாமைக்கு ஏதுவாய அருள். காவிரியாற்று நீராகலின், ஆடும் நீராயிற்று. கொல்லை வெள்ளேறு - முல்லை நிலத்தில் உள்ள எருது. "நாம்" என்றது, அடியார் பலரையும் உளப்படுத்தும் என்க. 4. பொ-ரை: தோட்டைக் காதிலே இட்ட, தூய நெறியாய் உள்ளவனும், உயிர்கட்குப் பிறப்பும் இறப்புமாய் நிற்பவனும், இசையொடு பாடுதற்குரிய சிறந்த வேதத்தைச் செய்ய வல்லவனும் ஆகிய, பசிய சோலைகளில் குயில்கள் கூவ, அவ்விடத்தே, ஆடுந் தன்மையுடைய சிறந்த மயில் அன்னத்துடன் நின்று ஆட அலைகின்ற நீரையுடைய வயல்களையுடைய திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, நாம் விரும்பி வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.
|