574. | குற்ற மொன்றடி யாரில ரானாற் | | கூடு மாறுத னைக்கொடுப் பானைக | | கற்ற கல்வியி லும்மினி யானைக் | | காணப் பேணு மவர்க்கெளி யானை | | முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை | | மூவ ரின்முத லாயவன் றன்னைச் | | சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த் | | தோன்ற லைப்பணி யாவிட லாமே. | | 5 |
575. | காடி லாடிய கண்ணுத லானைக் | | கால னைக்கடிந் திட்டபி ரானைப் | | பாடியா டும்பரி சேபுரிந் தானைப் | | பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத் |
கு-ரை: வேடனாயது, அருச்சுனனுக்காக என்க. இனி, 'உருவ முடையனாய் எழுந்தருளியிருக்கின்ற' என்றும் ஆம். "துறப்பு" என்ற விடத்து, எண்ணும்மை தொகுத்தலாயிற்று. 'கூவிட, ஆட அலைகின்ற புனல்' என்க. 5. பொ-ரை: அடியவர் குற்றம் சிறிதும் இலராயினாரெனின், அவர்கள் அடையுமாறு தன்னையே கொடுப்பவனும், வருந்திக் கற்ற கல்வியினும் மேலாக இனிமையைச் செய்கின்றவனும், ஐம்புலன்களையும் முற்றத்துறந்து பற்றின்றி இருப்பவனும், காரணக் கடவுளர் மூவருள் முதல்வனாயினவனும் ஆகிய, சுற்றிலும் நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால் அங்குச் சென்று அவனைவணங்குவோம். கு-ரை: யாவரும் அடியவரேயாதலின், மக்களை, "அடியவர்" என்றார். 'கூடுமாறதனை' எனவும், 'சுற்று நீள் வயல்' எனவும் ஓதுவன சிறவாமை காண்க. 6. பொ-ரை: காட்டில் ஆடுகின்ற, கண்ணையுடைய நெற்றியை யுடையவனும், கூற்றுவனை அழித்த தலைவனும், அன்பினால் பாடி ஆடுகின்ற செயலையே விரும்புபவனும், பொருட்சார்புகளையும் உயிர்ச்சார்புகளையும் நீக்குபவனும், மாலும் அயனும் தேடிக்
|