| தேடி மாலயன் காண்பரி யானைச் | | சித்த முந்தெளி வார்க்கெளி யானைக் | | கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் | | கூத்த னைப்பணி யாவிட லாமே. | | 6 |
576. | விட்டி லங்கெரி யார்கையி னானை | | வீடி லாத வியன்புக ழானைக் | | கட்டு வாங்கந் தரித்தபி ரானைக் | | காதி லார்கன கக்குழை யானை | | விட்டி லங்குபுரி நூலுடை யானை | | வீந்த வர்தலை யோடுகை யானைக் | | கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க் | | கண்டு நாம்பணி யாவிட லாமே. | | 7 |
காணுதற்கு அரியவனும், சொல்லாலன்றி, உள்ளத்தாலும் தன்னைத் தெளிந்தவர்க்கு எளியவனும் ஆகிய, அளவற்ற தேவர்கள் தொழுகின்ற, திருநீடூரின்கண் எழுந்தருளியுள்ள இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம். கு-ரை: 'காட்டில்' என்பது தொகுத்தலாயிற்று. "கோடி" என்றது, மிகுதியைக் குறித்தவாறு. 7. பொ-ரை: கவைவிட்டு விளங்குகின்ற தீப்பொருந்திய கையை யுடையவனும், அழியாத, பரந்த புகழையுடையவனும், மழுவை ஏந்திய தலைவனும், காதின்கண் பொருந்திய பொற்குழையை யுடையவனும், மார்பின்கண் எடுத்து விடப்பட்டு விளங்குன்ற முப்புரி நூலை உடையவனும், இறந்தவரது தலையோட்டைக் கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை. நாம் கட்டியைத் தரும் கரும்புகள் வளர்ந்துள்ள திருநீடுரின்கண் கண்டு வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், நாம் அங்குச் சென்று அவனை வணங்குவோம். கு-ரை: இறைவன் எல்லாம் உடையவனாகலின், பொற்குழையை யுடையவனாதல் சொல்லவேண்டுமோ என்பது.
|