பக்கம் எண் :

896
 
577.மாய மாய மனங்கெடுப் பானை

மனத்து ளேமதி யாயிருப் பானைக்

காய மாயமு மாக்குவிப் பானைக்

காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை

ஓயு மாறுறு நோய்புணர்ப் பானை

ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை

வேய்கொள் தோளுமை பாகனை நீடூர்

வேந்த னைப்பணி யாவிட லாமே.

8

578.கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்

காணப் பேணு மவர்க்கெளியானைத்

தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்

துன்ப முந்துறந் தின்பினி யானைப்



8. பொ-ரை: நிலையில்லாத பொருள்கள் மேற்செல்லுகின்ற மனத்தோடு ஒற்றித்து நின்று அதன்வழியே செல்லும் அறிவாய் இருப்பவனும், பின்னர் அம்மனத்தின் செயலைக்கெடுத்து அறிவை ஒரு நெறிப்படுத்துபவனும், காற்றும் தீயும் முதலிய கருவிகளாய் நின்று உடம்பாகிய காரியத்தைப் பண்ணுவிப்பவனும், பின்னர் அதனை அழிப்பவனும் உயிர்கள் வருந்துமாறு, அவற்றை அடையற் பாலனவாகிய வினைப்பயன்களைக் கூட்டுவிக்கின்றவனும், பின்னர் விரைவில் அவ்வினைகளை அழிப்பவனும், இவை எல்லாவற்றையும் செய்தற்கு மூங்கில் போலும் தோள்களையுடைய உமையைத் துணையாகக் கொள்பவனும் ஆகிய, திருநீடூரின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

கு-ரை: இத்திருப்பாடலுள், இறைவன் தனது சத்தியால், உயிர்கட்குப் பந்தமும் வீடும் தரும் முதல்வனாய் நிற்றலை விரித்தவாறு. படைத்தல் முதலியவற்றைப் பிறர் வாயிலாகவும் செய்தலின், "ஆக்குவிப்பான்" என்றும் அருளினார். 'உரு நோய் புணர்ப்பானை' என்பது பாடமாயின், 'உடம்பின்கண் வினைப்பயன்களை வருவிப்பவனும்' என உரைக்க.

9. பொ-ரை: கண்டத்தைக் கறுப்பாகவும் செய்து கொண்ட தலைவனும், தன்னைக் காண விரும்பும் அடியார்களுக்கு எளியவனும்