பக்கம் எண் :

897
 

பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்

பாக மாமதி யானவன் றன்னைக்

கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்

கேண்மை யாற்பணி யாவிட லாமே.

9

579.அல்ல லுள்ளன தீர்த்திடு வானை

அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்

கொல்லை வல்லர வம்மசைத் தானைக்

கோல மார்கரி யின்னுரி யானை

நல்ல வர்க்கணி யானவன் றன்னை

நானுங் காதல்செய் கின்றபி ரானை

எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்

ஏத்தி நாம்பணி யாவிட லாமே.

10


தனக்குத் தொண்டு பூண்டவரைப் பெரிதும் விரும்புபவனும், துன்பம் இல்லாத இன்பத்தைத் தரும் இனியவனும், பழைய வலிய வினைகளையெல்லாம் அழிப்பவனும், பகுதிப் பட்ட சந்திரனுக்குக் களைகண் ஆயினவனும் ஆகிய இறைவனை, நாம் கெண்டை மீன்களும், வாளைமீன்களும் துள்ளுகின்ற நீரையுடைய திருநீடூரின்கண் கேண்மையோடு வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

கு-ரை: உம்மை மாற்றியுரைக்கப்பட்டது, அது, 'மேனி முழுதும் சிவக்கச் செய்துகொண்டவன், ஓரிடத்துக் கறுக்கவும் செய்து கொண்டான்' என்பது தோற்றி நிற்றலின், இழிவு சிறப்பு. உலகின்பம் துன்பத்தோடு விரவாது நிற்றல் இன்மையின், இறைவன் இன்பத்தினது சிறப்பு உயர்த்துவார், 'துன்பமுந்துறந்து இன்பத்தையுடைய இனியவன்' என்றார். இவ்வும்மை, உயர்வு சிறப்பு. 'துறந்த' என்னும் அகரம் தொகுத்தலாயிற்று. 'மதிக்கு' என உருபு விரிக்க. கேண்மை, ஆண்டானும் அடிமையுமாகிய உறவு.

10. பொ-ரை: 'துன்பம்' எனப்படுவனவற்றைப் போக்குகின்றவனும், தன்னை அடைந்தவர்கட்கு அமுதம் போன்று பயன் தருபவனும், கொல்லுதலையுடைய வலிய பாம்பைக் கட்டியிருப்பவனும், அழகு பொருந்திய யானையின் தோலையுடையவனும், நன்னெறியில் நிற்பவர்கட்கு அணிகலமாய்த் திகழ்பவனும், அடி