பக்கம் எண் :

898
 
580.பேரோ ராயிர மும்முடை யானைப்

பேசி னாற்பெரி தும்மினி யானை

நீரூர் வார்வடை நின்மலன் றன்னை

நீடூர் நின்றுகந் திட்டபி ரானை

ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்

ஆதரித்தழைத் திட்டஇம் மாலை

பாரூ ரும்பர வித்தொழ வல்லார்

பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.

11

திருச்சிற்றம்பலம்


யேனும் விரும்புகின்ற தலைவனும் ஆகிய இறைவனை, நாம், இரவில் மல்லிகை மலர்கள் மிகவும் மணம் வீசுகின்ற திருநீடூரின் கண் துதித்து வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அங்குச் சென்று அவனை வணங்குவோம்.

கு-ரை: ஞான நெறியில் நிற்பவர்க்கு அந்த ஞானத்தைச் சிறப்பித்து நிற்றலின், "அணியானவன்" என்று அருளினார்; இதற்கு, 'அண்மையனானவன்' என உரைப்பாரும் உளர். "ஏகமழ்" என்றதில் ஏ, உரிச்சொல்.

11. பொ-ரை: எல்லாப் பெயர்களையும் உடையவனும், வாயாற் பேசும்வழி பெரிதும் இனிப்பவனும், நீர் ததும்புகின்ற நீண்ட சடையினையுடைய தூயவனும் ஆகிய, திருநீடூரை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, அவன் திருவடியைக்கண்டு வணங்குதற்கு அன்போடு விரும்பி, நம்பியாரூரன் அனைவரையும் அழைத்துப் பாடிய இத்தமிழ்மாலையால், நிலவுலகத்து உள்ள எவ்வூரின்கண்ணும் இறைவனைப் பாடி வணங்க வல்லவர், அவனுக்கு அடியவராகி, முத்தியைப் பெறுவார்கள்.

கு-ரை: முற்றும்மை கொடுத்தோதினமையின், "ஆயிரம்" என்றது, 'எல்லாம்' என்னும் பொருட்டாதல் பெறப்பட்டது. பொருள் தோறும் உள்ள பெயர்கள் வேறுவேறாயினும், அவை அனைத்தும், ஆகு பெயரால் இறைவனை உணர்த்தும் தன்மையுடையன என்பது மெய்ந் நூல் துணிபு. இதனால், இறைவன் எல்லாப் பொருள்களுமாய் நிற்றல் பெறப்படுவது என்க. 'மாலையால்' என உருபு விரிக்க. "ஊர்" என்ற விடத்து, 'எல்லாம்' என்பது வருவிக்க. பரவித்தொழுதலுக்குச் செயப்படுபொருள் எஞ்சி நின்றது.