பக்கம் எண் :

901
 
583.வெந்த நீறுமெய் பூசவல் லானை

வேத மால்விடை ஏறவல் லானை

அந்தமா திஅறி தற்கரி யானை

ஆறலைத் தசடை யானைஅம் மானைச்

சிந்தை என்தடு மாற்றறுப் பானைத்

தேவ தேவன்என் சொல்முனி யாதே

வந்தென்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

3

584.தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்

தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்

படங்கொள்நா கம்மரை யார்த்துகந் தானைப்

பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை



3. பொ-ரை: வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும், வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும், முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும், ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும், பெரியோனும், எனது மனக் கலக்கத்தைக் களைபவனும், தேவர்களுக்குத் தேவனும், யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்தில் புகுந்து நிற்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: வெந்த நீற்றை மெய்யிற் பூசுதலாவது உலகத்தின் ஆற்றலைத் தாங்குதலாகலானும், வேதத்தை ஏறுதலாவது, உயிர்கட்குச் செய்வன தவிர்வனவற்றை அறிந்து அறிவித்தலாகலானும் இவை பிறரால் ஆகாமை அறிந்து கொள்க. வேதம், சிவபெருமானுக்குக் குதிரை, சிலம்பு முதலியனவாய் அமைந்தமைபோல, விடையாக அமைந்தமை இவ்விடத்துப் பெறப்படுகின்றது. கலக்கமாவது, உலகியலிடத்தும், பிற தேவரிடத்தும் செல்லுதல். "சொல்" என்றது, 'பித்தன்' என்றதனை. 'தேவதேவன்' என்புழியும் இரண்டனுருபு விரிக்க.

4. பொ-ரை: பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள், பிறவிடத்துச் செல்லாது, தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும், படத்தை உடைய பாம்பை அரையில் விரும்பிக் கட்டியுள்ளவனும், முன்னர் விளங்கும் பற்களை