பக்கம் எண் :

902
 

நடுங்கஆ னையுரி போர்த்துகந் தானை

நஞ்சம்உண் டுகண் டங்கறுத் தானை

மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

4

585.வளைக்கைமுன் கைமலை மங்கை மணாளன்

மார னாருடல் நீறெழச் செற்றுத்

துளைத்தவங் கத்தொடு தூமலர்க் கொன்றை

தோலும்நூ லும்துதைந் தவரை மார்பன்

திளைக்குந் தெவ்வர் திரிபுர மூன்றும்

அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ

வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

5


யுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும், தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ளவனும், நஞ்சினை உண்டு கண்டம்கரியதாகியவனும், மாதொரு பாகனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: 'தடங்கை' என விதந்தது, அவை தரப்பட்டது. இதன் பொருட்டே யாயினமையை முடித்தற்கு, "தன்னடிக்கு" என்றது, உருபு மயக்கம். ஏகாரம் பிரிநிலை. "செல்லுமாறு" என்றதன்பின், 'செலுத்த' என்பது வருவிக்க. இனி "செலுத்துமாறு" என்னும் வினைதானே, "செல்லுமாறு" எனத் தொக்குத் தன்வினையாய் நின்றது எனலுமாம். "பல்லின்" என எடுத்தோதினமையால், அதன் விளக்கம் பெறப்பட்டது. 'தேவியும்' என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது.

5. பொ-ரை: வளையை அணிந்த முன் கையையுடைய மலை மகளுக்கு மணாளனும், மன்மதனது அரிய உடம்பு சாம்பலாய் ஒழியுமாறு அழித்தவனும், துளைசெய்யப்பட்ட எலும்பும், தூய கொன்றை மலரும், தோலும், நூலும் நெருங்கிய, கீற்றுக்களையுடைய மார்பையுடையவனும், வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும், அதன்கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும், அவரைச் சார்ந்த அசுரரும், அவர்தம் பெண்டிரும், பிள்ளைகளும் வெந்தொழியுமாறு வளைத்த வில்லையுடையவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில்